/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓணத்துக்கு போத்தனூர், திருப்பூர் வழி எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில்

ADDED : செப் 01, 2024 01:29 AM
கோவை;ஓணம் பண்டிகையை முன்னிட்டு போத்தனூர், திருப்பூர் வழியாக எர்ணாகுளம் - எலகங்கா சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் வரும் 6ம் தேதி வரை, ஞாயிறு, புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் எர்ணாகுளத்தில் இருந்து சிறப்பு ரயில் (எண்:06101) மதியம் 12:40 மணிக்கு புறப்படும். போத்தனூரை மாலை 4:13 மணிக்கும், திருப்பூரை மாலை 4:58 மணிக்கும் வந்தடையும்.
அதேபோல, நாளை முதல் வரும் 7ம் தேதி வரை, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் எலகங்காவில் இருந்து மதியம் 2:20 மணிக்கு, சிறப்பு ரயில் (எண்:06102) புறப்படும். இந்த ரயில் திருப்பூரை காலை 10:33 மணிக்கும், போத்தனூரை 11:15 மணிக்கும் வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில் திருச்சூர், சொரனூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, ஒயிட்பீல்டு, கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த அறிவிப்பை, தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.