/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாகன விபத்து தவிர்க்க வேகத்தடை அமைத்தாச்சு! 'தினமலர்' செய்தி எதிரொலி
/
வாகன விபத்து தவிர்க்க வேகத்தடை அமைத்தாச்சு! 'தினமலர்' செய்தி எதிரொலி
வாகன விபத்து தவிர்க்க வேகத்தடை அமைத்தாச்சு! 'தினமலர்' செய்தி எதிரொலி
வாகன விபத்து தவிர்க்க வேகத்தடை அமைத்தாச்சு! 'தினமலர்' செய்தி எதிரொலி
ADDED : மார் 11, 2025 09:49 PM

கிணத்துக்கடவு, ;'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, கொண்டம்பட்டி ரோட்டில் வளைவான பகுதியில், வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு --- வடசித்தூர் ரோட்டில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்த ரோட்டில், வளைவான பகுதிகள் அதிகம் உள்ளது. இதில், கொண்டம்பட்டி அருகே தனியார் கல்லூரி பகுதியில் இரண்டு அபாயகரமான வளைவுகள் உள்ளது.
இப்பகுதியில், அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வந்தது. இதனால், இங்கு உள்ள இரண்டு வளைவுகளிலும் வேகத்தடை அமைக்க வேண்டும் என, பல மாதங்களாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுபற்றி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, இரண்டு வளைவு பகுதியிலும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
மக்கள் கூறியதாவது:
பல மாதங்களாக வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து, கோரிக்கை நிறைவேறியுள்ளது. இதனால், இப்பகுதியில் விபத்து தவிர்க்கப்படும்.
வேகத்தடை அமைத்துள்ள இடத்தில் அறிவிப்பு பலகையும் அமைக்க வேண்டும். அப்போது தான், அனைத்து வாகனங்களும் வேகத்தை குறைத்து இயக்க வசதியாக இருக்கும்.
இவ்வாறு, கூறினர்.