/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேகத்தடை சீரமைப்பு; வாகன ஓட்டுநர்கள் நிம்மதி
/
வேகத்தடை சீரமைப்பு; வாகன ஓட்டுநர்கள் நிம்மதி
ADDED : செப் 13, 2024 10:24 PM

வால்பாறை : 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, வால்பாறையில் சேதமடைந்திருந்த வேகக்தடை சீரமைக்கபட்டது.
சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறை நகரில், அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. இந்நிலையில், விபத்தை தடுக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
இதில், பெரும்பாலான இடங்களில் வேகத்தடை, சேதமடைந்து உள்ளது. இதனால், வேகமாக வரும் வாகனங்கள் வேகத்தடை அருகே தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றன.
மேலும், பல்வேறு இடங்களில் வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசப்படவில்லை. இதனால், வாகனங்களில் வருபவர்கள் தடுமாறும் நிலை உள்ளது. இதுபற்றி, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதனையடுத்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சேதமடைந்து காணப்பட்ட வேகத்தடையை தற்காலிகமாக சீரமைத்துள்ளனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் வாகன ஓட்டுநர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.