/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலக்காட்டிலும் வந்தாச்சு ஸ்ரீ கணபதி சில்க்ஸ்
/
பாலக்காட்டிலும் வந்தாச்சு ஸ்ரீ கணபதி சில்க்ஸ்
ADDED : ஆக 25, 2024 01:36 AM

பாலக்காடு;பாலக்காடு, இங்கிலீஷ் சர்ச் சாலை, மிஷன் ஸ்கூல் சந்திப்பில், ஸ்ரீ கணபதி சில்க்சின் 6வது கிளையை, கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி சேர்மன் காமகோடி திறந்து வைத்தார்.
தரை தளத்தை, ஜடல் நிர்வாக சேர்மன் கோபாலகிருஷ்ண மோகன் திறந்து வைக்க, முதல் விற்பனையை, பாலக்காடு அட்டாச்சி குரூப் அலமேலு சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். மேட்சிங் செக்சனை, பாலக்காடு நகராட்சி தலைவர் பிரமிளா திறந்து வைக்க, விற்பனையை பாலக்காடு மேர்சி கல்லுாரி மாணவி எடிட்டர் ஷிவானி துவக்கி வைத்தார்.
சில்க் பிரிவை பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டி திறந்து வைக்க, பாலக்காடு டிரினிட்டி மருத்துவமனை டாக்டர் மிருதுளா முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
இதேபோல், மற்ற பிரிவுகளையும் முக்கிய பிரமுகர்கள் திறந்து வைத்து, விற்பனையை துவக்கி வைத்தனர்.
திறப்பு விழாவை முன்னிட்டு, ஓணம் பண்டிகை வரை குலுக்கல் முறையில் வாடிக்கையாளர்களுக்கு, அரை பவுன் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது.
ஸ்ரீ கணபதி சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியன், நிர்வாகிகள் கணபதி, முத்துசாமி, அருணாசலம் மற்றும் வாடிக்கையாளர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.

