/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில் ஸ்ரீ ஜெயந்தி வைபவம்
/
சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில் ஸ்ரீ ஜெயந்தி வைபவம்
சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில் ஸ்ரீ ஜெயந்தி வைபவம்
சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில் ஸ்ரீ ஜெயந்தி வைபவம்
ADDED : ஆக 29, 2024 02:36 AM

மேட்டுப்பாளையம் : வைணவ திருத்தலங்களில், பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாத சுவாமி கோவிலின், உபய கோவில் ஆன, அருள்மிகு சந்தான வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீ ஜெயந்தி என்னும் கிருஷ்ண ஜெயந்தி வைபவம் நடந்தது.
நேற்று முன் தினம் இரவு ராக்கால பூஜை முடிந்து, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் நடந்தது. இதில் நெய், தேன், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், நவ கலச தீர்த்தம் ஆகியவற்றால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்தலத்தார்கள் திவ்ய பிரபந்தத்தில், பெரியாழ்வார் இயற்றிய திருமொழியில் பாசுரங்கள் சேவித்தனர்.
தொடர்ந்து கிருஷ்ணருக்கு உகந்த பலகாரங்கள், நிவேதனம் செய்யப்பட்டு சாற்று முறை நடைபெற்றது. வைபவம் முடிந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வைபவத்தில், ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், திருக்கோவில் நிர்வாகிகள், அறங்காவலர் குழுவினர், ஸ்ரீபாதம் தாங்கிகள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

