முதலுதவி பயிற்சி தருகிறது செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ்
முதலுதவி பயிற்சி தருகிறது செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ்
ADDED : ஆக 06, 2026 06:01 PM
அ நிறம் | அளவு
செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் அசோசியேஷன் மதுக்கரை மையம், இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சான்றளிக்கப்பட்ட முதலுதவி பயிற்சி வழங்கியுள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 2025-ம் ஆண்டுக்கான ‘தமிழ்நாட்டின் சிறந்த மையம்’ என்ற விருதையும் இம்மையம் பெற்றுள்ளது.
அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்கள் கலந்துரையாடல் முறையில் பயிற்சி அளிப்பதால், அவசர காலங்களில் முதலுதவி வழங்கும் திறனை பயிற்சியாளர்கள் எளிதில் கற்றுக்கொள்கின்றனர். முதலுதவியில் பயிற்சி பெற விரும்புவோர், 94862 55315 என்ற மொபைல் எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது stjohn.mdki@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
