/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.என்.எஸ்., கல்லுாரியில் மாநில அளவிலான கருத்தரங்கு
/
எஸ்.என்.எஸ்., கல்லுாரியில் மாநில அளவிலான கருத்தரங்கு
எஸ்.என்.எஸ்., கல்லுாரியில் மாநில அளவிலான கருத்தரங்கு
எஸ்.என்.எஸ்., கல்லுாரியில் மாநில அளவிலான கருத்தரங்கு
ADDED : ஆக 28, 2024 11:27 PM

கோவை : எஸ்.என்.எஸ்., காலேஜ் ஆப் அலைட் ஹெல்த் சயின்ஸில், மாநில அளவிலான கருத்தரங்கு நடந்தது.
எஸ்.ஜி.,கேஸ்ட்ரோ கேர் மருத்துவமனை தலைவர் கணேசன் பேசுகையில், ''குடல் ஆரோக்கியம் அனைவருக்கும் அவசியம். அதற்கேற்ற உணவு உட்கொள்ள வேண்டும். முறையான உணவுப்பழக்கம் இல்லாததால், பிரச்னைகள் ஏற்படுகின்றன,'' என்றார்.
நிகழ்ச்சியில், வேதநாயகம் மருத்துவமனை டாக்டர் ஆனந்தி, ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை டாக்டர்கள் சந்தான பாபு, இளவரசன், ஜி.கே.என்.எம்., மருத்துவமனை டாக்டர் வேதா சங்கரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எஸ்.என்.எஸ்., நிறுவனங்களின் தலைவர் சுப்ரமணியன், தாளாளர் ராஜலட்சுமி, தொழில்நுட்ப இயக்குநர் நளின் விமல்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.