/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இதயங்கள் அறக்கட்டளையின் நவீன தொழில்நுட்ப மையம்
/
இதயங்கள் அறக்கட்டளையின் நவீன தொழில்நுட்ப மையம்
ADDED : ஆக 18, 2024 10:57 PM

கோவை;இதயங்கள் அறக்கட்டளையின் மதுரம் சர்க்கரை மற்றும் தைராய்டு மையத்தில் நடந்த நவீன தொழில்நுட்ப மையம் துவக்க விழா, நேற்று நடந்தது.
இதயங்கள் அறக்கட்டளை நிறுவனர் கிருஷ்ணன் சுவாமிநாதன் கூறுகையில், ''இது உயர்ரக தொழில்நுட்பத்துடன் கூடிய மையம். இதன் வாயிலாக குழந்தைகளுக்கு விரைந்து பரிசோதனை மேற்கொள்ள முடியும்.
முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட, குழந்தைகளுக்கு இதயங்கள் அறக்கட்டளை வாயிலாக பல்வேறு உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது அரசு மருத்துவமனைகளில் முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, உதவி வருகிறோம்,'' என்றார்.
முன்னதாக, மூத்த ஆடிட்டர் விட்டல், விஜயராகவன் ஆகிய உயர்ரக தொழில்நுட்ப மையத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, உயர்ரக இன்சுலின் பம்ப் வழங்கப்பட்டது.
தாரகராம் நிறுவனத்தின் பிரித்வி, டாக்டர் ராதிகா, ஜி.டி. அறக்கட்டளை அன்ஜனகுமார், விஷன் குழுமத்தின் பிரசாத், ராசி சீட்ஸ் பொது மேலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.