/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில இறகுப்பந்து; மாணவர்கள் அபாரம்
/
மாநில இறகுப்பந்து; மாணவர்கள் அபாரம்
ADDED : ஆக 19, 2024 12:26 AM

கோவை;கோவை மாவட்ட இறகுப்பந்து சங்கம், தமிழ்நாடு இறகுப்பந்து சங்கம் சார்பில் 19 வயதுக்கு உட்பட்ட மாணவ - மாணவியருக்கான இறகுப்பந்து போட்டி, ராக்ஸ் அகாடமியில் நடந்தது.
மாணவ - மாணவியருக்கு ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டன. இப்போட்டியில், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர், தகுதி சுற்றுகளில் போட்டியிட்டனர்.
மாணவர் ஒற்றையர் காலிறுதி போட்டியில், கோவையை சேர்ந்த பூபேஷ் 2 - 1 என்ற செட் கணக்கில் திருநெல்வேலியை சேர்ந்த ஜோஸ்வா நிக்கோலசையும்; சென்னையின் சுகி சாய் பாலசிங்கா 2 - 0 செட் கணக்கில், திருவள்ளூரை சேர்ந்த ஹர்ஷவம்சியையும் வீழ்த்தினர்.
மாணவியர் ஒற்றையர் காலிறுதி போட்டியில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழந்தி 2 - 0 என்ற செட் கணக்கில், சென்னை வீராங்கனை சுவாதியையும்; ஈரோட்டை சேர்ந்த அர்ச்சிதா 2 - 1 என்ற செட் கணக்கில், சென்னையின் ரம்யாவையும் வீழ்த்தினர்.
மாணவர் இரட்டையர் பிரிவில், ஸ்வஸ்திக், விநாயக்ராம் ஜோடி 2 - 0 என்ற செட்களில் சிவ தாணு, அஸ்வின் ஜோடியையும்; அருள்முருகன், மதி முகில் ஜோடி 2 - 0 என்ற செட் கணக்கில் நிரஞ்சன், விஸ்வஜித் ராஜ் ஜோடியையும் வீழ்த்தினர்.

