sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பிளஸ் 2 ஆங்கிலம் பாடத்தேர்வு மிகவும் 'ஈசி' மாணவர்கள் மகிழ்ச்சி

/

பிளஸ் 2 ஆங்கிலம் பாடத்தேர்வு மிகவும் 'ஈசி' மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ் 2 ஆங்கிலம் பாடத்தேர்வு மிகவும் 'ஈசி' மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ் 2 ஆங்கிலம் பாடத்தேர்வு மிகவும் 'ஈசி' மாணவர்கள் மகிழ்ச்சி


ADDED : மார் 06, 2025 09:57 PM

Google News

ADDED : மார் 06, 2025 09:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- - நிருபர் குழு -

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 ஆங்கிலம் பொதுத்தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது என, மாணவர்கள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, 38 மையங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், நேற்று, பிளஸ் 2 மாணவர்களுக்கான, ஆங்கிலம் மொழித்தேர்வு தேர்வு நடந்தது.

தேர்வு குறித்து கந்தசாமி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கருத்து

ஹரிஹரன்: ஆங்கிலம் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது. அனைத்து வினாக்களுக்கும் சரியாக பதில் எழுதியுள்ளேன். ஏற்கனவே நன்கு படித்து, பயிற்சி பெற்றிருந்ததால், தேர்வை எளிதாக எதிர்கொள்ள முடிந்தது. குறிப்பாக, 20 நிமிடத்திற்கு முன்னதாகவே அனைத்து விடைகளையும் எழுதி விட்டேன். முழு மதிப்பெண் கிடைக்கும்.

ஜீவானந்தம்: தேர்வுக்கு முன்னரே, வாசித்தும், எழுதியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். அதனால், அனைத்து ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் வினாக்களுக்கும் பதில் எழுதியுள்ளேன். எழுத்துப்பிழையின்றி அனைத்து விடைகளையும் சரியாக எழுத முடிந்தது. நல்ல மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

தனுஸ்ரீ: தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள், புத்தகத்தில் இருந்து நேரடியாக கேட்கப்பட்டிருந்தது. நன்கு பயிற்சி செய்திருந்ததால், இரண்டு மதிப்பெண், இலக்கண வினாக்களுக்கு எளிதாக பதில் எழுத முடிந்தது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே, தேர்வை எழுதி முடித்தேன். நுாறு சதவீதம் மதிப்பெண் கிடைக்கும்.

உடுமலை


பிளஸ் 2 ஆங்கிலத்தேர்வு மிகவும் சுலபமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உடுமலை கோட்டத்தில் 18 மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கிறது. நேற்று ஆங்கிலத் தேர்வு நடந்தது. கடந்தாண்டு வினாத்தாளை விடவும், மிகவும் எளிமையாக இருந்ததென தெரிவித்துள்ளனர்.

உடுமலை, பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கருத்து:

இந்துமதி: பிளஸ் 2 ஆங்கில வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் தமிழில் சிறிது குழப்பம் ஏற்பட்டதால், இதிலும் அவ்வாறு இருக்குமென பயந்தோம். ஆனால் நேரடியான வினாக்களாக இருந்ததால், எளிமையாக விடை எழுத முடிந்தது.

இதற்கு முந்தைய தேர்வு வினாத்தாள்களை பயிற்சி செய்திருந்தாலே, இந்த தேர்வில் சுலபமாக விடை எழுதி விடலாம் என்ற நிலையில்தான் இருந்தது. ஆங்கிலத் தேர்வு இவ்வாறு வந்தது மகிழ்ச்சியாகவும் உள்ளது.

ராமாத்தாள்: ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண், மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் சுலபமாகவே இருந்தது. ஆசிரியர்கள் அடிக்கடி தேர்வு வைத்த, பயிற்சி அளித்த வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டதால் உற்சாகத்தோடு விடை எழுதிவிட்டேன்.

ஆங்கிலத்தேர்வு எளிமையாக இருந்ததால், அதிக மதிப்பெண் பெறுவதற்கும் வாய்ப்புள்ளது. மேலும் இலக்கண, இலக்கிய வினாக்களும் எந்த குழப்பமும் இல்லாமல் எதிர்பார்த்த வகையில் கேட்கப்பட்டிருந்தது.

வால்பாறை


வால்பாறை துாய இருதய மேல்நிலைப்பள்ளி மாணவியர் கருத்து:

ஜெயஸ்ரீ: ஆங்கில மொழித்தேர்வை பொறுத்தவரை, படித்த பாடங்களில் இருந்து தான் வினாக்கள் கேட்கப்பட்டன. ஒரு மதிப்பெண்களுக்கான வினாக்கள் கடினமாக இருந்தன. மற்றபடி பிற வினாக்கள் எளிமையாகத்தான் இருந்தது. தேர்வை நல்ல முறையில் எழுதியுள்ளேன். நிச்சயம் நல்ல மதிப்பெண்கள் பெற்று பாசாகி விடுவேன்.

வித்யஸ்ரீ: பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லித்தந்த பாடங்களில் இருந்து, பெரும்பாலான கேள்விகள் கேட்கப்பட்டதால், தெரிந்த வினாக்களை முதலில் எழுதினேன். சில வினாக்கள் கடினமாக இருந்தாலும், 5 மதிப்பெண்களுக்கான வினாக்கள் ஈசியாக இருந்ததால், தேர்வை பயமில்லாமல் எழுதியுள்ளேன். எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

-நிவாஞ்சலி:

ஆங்கிலமொழித்தேர்வை பொறுத்தவரை, வினாத்தாளை வாங்கியவுடன் சந்தோஷமாக இருந்தது. ஆசிரியர் சொல்லித்தந்த பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டதால், தேர்வை அச்சமின்றி எழுதினேன். அதிக மதிப்பெண்களுக்கான வினாக்கள் ஈசியாகவும், குறைந்த மதிப்பெண்களுக்கான வினாக்கள் கடினமாகவும் இருந்தது. எதிர்பார்த்த அளவுக்கு மேல் கூடுதலாக மதிப்பெண்கள் பெறுவேன்.






      Dinamalar
      Follow us