/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆசிரியை மீது மாணவர்கள் புகார்
/
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆசிரியை மீது மாணவர்கள் புகார்
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆசிரியை மீது மாணவர்கள் புகார்
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆசிரியை மீது மாணவர்கள் புகார்
ADDED : பிப் 24, 2025 11:37 PM
கோவை, ; கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பவன்குமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரி மனு கொடுத்தனர்.
வடவள்ளி மருதாபுரம் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனு:
கோவை மாநகராட்சி, 37-வது வார்டுக்குட்பட்ட நஞ்சப்பன் வீதி, மருதாபுரத்தில் வசித்து வருகிறோம். கடந்த 1978ம் ஆண்டு எங்கள் பகுதியில் வசித்த, 60க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இந்த பட்டாக்களை, பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய மறுக்கின்றனர்.
இப்பகுதி மக்களுக்கு அரசு சார்பில் குடிநீர் கிணறு, 20 தொகுப்பு வீடுகள், கூட்டுறவு கடன் வழங்கியுள்ளன. அனைத்து வீடுகளுக்கும், பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் பட்டா பதிவு செய்ய மறுக்கின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்த 48 பேருக்கும், கோவை மாநகராட்சி 74-வது வார்டு பூசாரிபாளையம், ஓம்சக்தி நகர் பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேல் வசிக்கும் குடும்பத்தார், வீட்டுமனை பட்டா கோரி மனு அளித்தனர்.
* பீளமேடு செங்காளியப்பன் நகர் மக்கள் கவுன்சிலர் சித்ரா அளித்த மனுவில்,- '26வது வார்டுக்குட்பட்ட பீளமேடு பகுதியில், குழந்தைகளை பராமரிக்க அங்கன்வாடி மையங்கள் இல்லை. அங்கன்வாடி மையம் அமைத்து தர வேண்டும்' என்று கூறியிருந்தார்.
*ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள்அளித்த மனுவில், 'ஒண்டிப்புதூர் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர், எங்களுக்கு சரியாக பாடம் எடுப்பதில்லை. அந்த ஆசிரியை ஆய்வகத்துக்கு அழைத்து செல்வதில்லை. எங்களது கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தார்.