கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம்., படிக்க மாணவிகள் ஆர்வம்
கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம்., படிக்க மாணவிகள் ஆர்வம்
ADDED : ஜூன் 06, 2026 11:03 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை அரசு மகளிர் கல்லுாரிக்கு மாணவிகள் மத்தியில் நிலவும் வரவேற்பு, இந்த ஆண்டும் பதிவான விண்ணப்ப எண்ணிக்கையில் பிரதிபலித்துள்ளது. தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், கணிதம், கணினி அறிவியல் மற்றும் வணிகவியல் ஆகிய ஆறு இளநிலை படிப்புகளுக்கு, மொத்தம் 410 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இந்த படிப்புகளுக்காக 13,332 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடப்பிரிவின் ஷிப்ட்–1 ( 2,619)மற்றும் ஷிப்ட்–2 (1,549) வகுப்புகளுக்கு 4,168 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.
அடுத்ததாக பி.காம். ஷிப்ட்–1 (1,719) மற்றும் ஷிப்ட்–2 ( 1,069) பிரிவுகளுக்கு 2,788 மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். தமிழ் பாடப்பிரிவுக்கும் குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், 2,490 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
