/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடல் உறுப்பு தானத்திற்கு பதிவு செய்த மாணவர்கள்
/
உடல் உறுப்பு தானத்திற்கு பதிவு செய்த மாணவர்கள்
ADDED : ஆக 15, 2024 11:59 PM

கோவை : ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை உறுப்பு தானம் செய்ய மக்களை ஊக்குவிப்பதற்கு, பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில், உலக உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இளைய தலைமுறையினருக்கு உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.
ராமகிருஷ்ணா மருத்துவமனை இன்ஸ்டிட்யூட் ஆப் அலைட் ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி மாணவர்கள் , உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு நாடகத்தை நடத்தினர்.
டாக்டர்கள் செழியன், மது சங்கர், விகாஸ் மூண்ட் ஆகியோர் உயிர்களைக் காப்பாற்றுவதில் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் குறித்து விளக்கினர்.
ராமகிருஷ்ணா கல்லுாரிகளிலிருந்து, 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்தனர். நிகழ்வில், ராமகிருஷ்ணா மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி ராம்குமார், மருத்துவ இயக்குனர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் அழகப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.

