/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நல்லா படிங்க... படிப்புதான் முக்கியம்; மாணவியருக்கு கலெக்டர் 'அட்வைஸ்'
/
நல்லா படிங்க... படிப்புதான் முக்கியம்; மாணவியருக்கு கலெக்டர் 'அட்வைஸ்'
நல்லா படிங்க... படிப்புதான் முக்கியம்; மாணவியருக்கு கலெக்டர் 'அட்வைஸ்'
நல்லா படிங்க... படிப்புதான் முக்கியம்; மாணவியருக்கு கலெக்டர் 'அட்வைஸ்'
ADDED : மார் 09, 2025 11:50 PM

கோவை; கோவை, சுங்கம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவியர் விடுதியில், கலெக்டர் பவன்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அவர்களிடம் கலெக்டர் பவன்குமார் பேசுகையில், ''விடுதியில் தங்கிப் படிப்பவர்கள் அனைவரும் நுாறு சதவீத தேர்ச்சி பெற வேண்டும். பாடங்களில் சந்தேகங்கள் இருந்தால், சீனியர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். இந்த விடுதியில் தங்கிப்படித்து, உயர்கல்விக்குச் சென்ற மாணவியரின் விபரங்களை ஆய்வு செய்யப் போகிறேன். நீங்கள் நன்றாகப் படிக்க வேண்டும்,'' என்றார்.
அப்போது, ஒரு மாணவி குறுக்கிட்டு, 'முதலாமாண்டு மாணவியருக்கு மட்டுமே மெத்தை உள்ளிட்ட பொருட்கள் தருகின்றனர்; மற்ற மாணவிகளுக்கு தருவதில்லை' என கூறினார்.
உடனே, விடுதியில் இருந்த சக மாணவியர், அவரது புகாரை கைதட்டி, ஆரவாரம் செய்து வரவேற்றனர். அதற்கு விடுதி காப்பாளர்கள், 'தாட்கோ மூலமாக முதலாமாண்டு மாணவியருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது; இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவியருக்கு வழங்குவதில்லை' என கூறி சமாளித்தார்.
விடுதியில், 162 மாணவியர் தங்கிப் படிக்கின்றனர். மதிய உணவில் கீரை, 15 மாணவியருக்கு தலா ஒரு கம்ப்யூட்டர், விளையாட்டு பயிற்சி, துவைத்த துணிகளை காயப்போட இடம் ஒதுக்க கலெக்டரிடம் மாணவியர் கோரிக்கை விடுத்தனர். அவற்றை நிறைவேற்றித் தர, கலெக்டர் உறுதியளித்தார்.