ADDED : ஆக 20, 2024 10:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, கோதவாடி ரோட்டில் இருந்து நல்லட்டிபாளையம் செல்லும் ரோட்டின் ஓரத்தில் குப்பை குவிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
கிணத்துக்கடவு, கோதவாடி ரோட்டில் இருந்து நல்லட்டிபாளையம் செல்லும் ரோட்டில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்த ரோட்டின் ஓரத்தில் பெரிய குட்டை உள்ளது.
இந்த ரோட்டின் ஓரத்தில் அதிகளவு கட்டட கழிவு மற்றும் பிளாஸ்டிக் குப்பை கொட்டப்பட்டுள்ளது. மழை காலத்தில் இந்த குப்பையில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பொதுச்சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு கொட்டப்பட்ட குப்பையை உடனடியாக அகற்றவும், மறுபடியும் குப்பை கெட்டாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

