/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறிவிக்கப்படாத மின் வெட்டால் அவதி
/
அறிவிக்கப்படாத மின் வெட்டால் அவதி
ADDED : ஆக 07, 2024 11:00 PM
வால்பாறை : வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளுக்கு, அய்யர்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் செய்யப்படுகிறது. மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக மாதத்தில் ஒரு நாள் மின் தடையும் செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த, 10 நாட்களுக்கு மேலாக எவ்வித முன் அறிவிப்பும் இன்றி அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது.
மக்கள் கூறுகையில், 'எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. இதனால், வியாபாரிகள், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த வால்பாறையில், மின் வெட்டு ஏற்படுவதால், இரவு நேரங்களில் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. எனவே, வால்பாறையில் முன் அறிவிப்பின்றி பல மணி நேரம் மின் வெட்டு செய்வதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்,' என்றனர்.