/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டுமனை பட்டா வழங்காததால் தாசில்தார் அலுவலகம் முற்றுகை
/
வீட்டுமனை பட்டா வழங்காததால் தாசில்தார் அலுவலகம் முற்றுகை
வீட்டுமனை பட்டா வழங்காததால் தாசில்தார் அலுவலகம் முற்றுகை
வீட்டுமனை பட்டா வழங்காததால் தாசில்தார் அலுவலகம் முற்றுகை
ADDED : ஆக 20, 2024 10:22 PM

பொள்ளாச்சி : இலவச வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து பொதுமக்கள் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனைமலை அடுத்த அங்கலகுறிச்சி, ஆழியாறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுக்களாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். நேற்று ஆனைமலை தாசில்தார் அலுவலகம் வந்த பொதுமக்கள் திடீர் முற்றுகையில் ஈடுபட்டனர்.
ஆனைமலை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு வந்து பொதுமக்களுடன் பேச்சு நடத்தினர்.
பொமக்கள் கூறுகையில், 'கூலி வேலைக்கு சென்று தான் வருவாய் ஈட்டுகிறோம். எங்களது பெரும் பகுதி வருவாய், வீட்டு வாடகைக்கு செலவாகிறது. இதனால், கடந்த, 3 ஆண்டுகளாக ஜமாபந்தி, மக்கள் குறைதீர்ப்பு கூட்டம், மக்களுடன் முதல்வர் முகாம் உள்ளிட்ட அனைத்து சிறப்பு கூட்டங்களுக்கும் சென்று மனு அளித்தோம்.
ஆனால், இது வரை மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து தாசில்தார் அலுவலகம் வந்தோம். இங்கும் தீர்வு கிடைக்கவில்லை. இதையடுத்து அலுவகத்தை முற்றுகையிட்டோம்,' என்றனர்.
வருவாய் துறையினர் மற்றும் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, சமரசம் செய்தனர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.