/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயணியரை உட்கார அனுமதிக்காத பஸ்கள் மீது நடவடிக்கை எடுங்க!
/
பயணியரை உட்கார அனுமதிக்காத பஸ்கள் மீது நடவடிக்கை எடுங்க!
பயணியரை உட்கார அனுமதிக்காத பஸ்கள் மீது நடவடிக்கை எடுங்க!
பயணியரை உட்கார அனுமதிக்காத பஸ்கள் மீது நடவடிக்கை எடுங்க!
ADDED : செப் 12, 2024 08:41 PM
கிணத்துக்கடவு : பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், தனியார் பஸ்சில் கிணத்துக்கடவு பயணியரை ஏற்ற மறுப்பதால் அவதிப்படுகின்றனர்.
பொள்ளாச்சியில் இருந்து, கோவைக்கு தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், பொள்ளாச்சியில் இருந்து இயக்கப்படும் சில தனியார் பஸ்களில் கிணத்துக்கடவு பயணியர் அமரும் போது, பஸ் கிணத்துக்கடவு ஸ்டாப்பில் நிற்காது மேம்பாலத்தில் செல்கிறது, என, தெரிவிகின்றனர்.
இதனால், பயணியர் பஸ்சில் இருந்து கீழே இறங்கியதும், கோவை செல்லும் பயணியரை மட்டும் அமர அனுமதிக்கின்றனர். பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து, பஸ் கிளம்பும் போது, கிணத்துக்கடவு பயணியரை பஸ்சில் ஏற அனுமதிக்கின்றனர். இதனால் பயணியர் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து, கிணத்துக்கடவை சேர்ந்த பயணியர் பல முறை அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த பயனும் இல்லை. பயணியரை சீட்டில் அமர கூடாது என சொல்வது மற்றும் ஸ்டேஜ் உள்ள ஸ்டாப்களில் பஸ் நிற்காமல் செல்வது, மேம்பாலத்தின் மீது செல்வது போன்ற விதிமீறல்கள் தொடர்கிறது.
இதுபற்றி பல முறை புகார் தெரிவித்தும், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். விதிமீறும் தனியார் பஸ்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்துகின்றனர்.