/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புரதச்சத்து உணவு உட்கொள்ளுங்கள் காசநோயாளிகளுக்கு அறிவுறுத்தல்
/
புரதச்சத்து உணவு உட்கொள்ளுங்கள் காசநோயாளிகளுக்கு அறிவுறுத்தல்
புரதச்சத்து உணவு உட்கொள்ளுங்கள் காசநோயாளிகளுக்கு அறிவுறுத்தல்
புரதச்சத்து உணவு உட்கொள்ளுங்கள் காசநோயாளிகளுக்கு அறிவுறுத்தல்
ADDED : ஆக 28, 2024 11:54 PM

பொள்ளாச்சி: காசநோய்க்கு சிகிச்சை பெறுவோர், புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என, டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
பொள்ளாச்சி, தலைமை அரசு மருத்துவமனையில், காசநோய் தடுப்புப் பிரிவு மற்றும் கோவை 'ஆல் சில்ட்ரன் டிரஸ்ட்' வாயிலாக, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா தலைமை, காசநோய் தடுப்பு பிரிவு டாக்டர் பிரவீன் முன்னிலை வகித்தார். முன்னதாக, காசநோயாளிகளுக்கு புரதச்சத்து உணவு வழங்கப்பட்டது. டாக்டர்கள் பேசியதாவது:
மருத்துவமனையில் காசநோய் சிகிச்சை பெறுவோர், புரதச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். காச நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் எடை குறைந்து காணப்படும் என்பதால், மாத்திரை உட்கொள்ளும் போது பசி அதிகரிக்கும். குறிப்பாக, முட்டை, நிலக்கடலை கொண்டைக்கடலை, பாசிப்பயறு, பேரிச்சம்பழம், புரதச்சத்து பவுடர் ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
நோய் உறுதி செய்யப்பட்டால், காச நோய் எதிர்ப்பு மருந்துகளை, முழு சிகிச்சை காலத்திற்கு எடுத்து கொண்டால் மட்டுமே, நோயை முழுமையாக குணப்படுத்த முடியும். இதற்காகவே, சிகிச்சை எடுத்தும் வரும் காசநோயாளிகளுக்கு, மாதந்தோறும், 500 ரூபாய் வழங்கப்படுகிறது.
மேலும், இலவசமாக பரிசோதனை மற்றும் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. மருந்து உட்கொள்வதை பாதியில் நிறுத்திவிட்டால், அடுத்த முறை சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படும்.
இவ்வாறு, பேசினர்.

