/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ் மட்டும் போதாது; ஆங்கிலம் கற்க பயிற்சி
/
தமிழ் மட்டும் போதாது; ஆங்கிலம் கற்க பயிற்சி
ADDED : மார் 01, 2025 05:49 AM
கோவை; கோவை மாநகர போலீசாருக்கான 'ஸ்போக்கன் இங்கிலீஸ்' பயிற்சி வகுப்பை, மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் நேற்று, துவக்கி வைத்தார்.
தனியார் ஸ்போக்கன் இங்கிலீஸ் பயிற்சி நிறுவனம் சார்பில், 'இங்கிலீஸ் ஆன் டியூட்டி' என்ற பெயரில் கோவை மாநகர போலீசார் 55 பேருக்கு, ஒரு மாத கால ஆங்கில பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
வரும் 3ம் தேதி முதல், ஒரு மாதத்திற்கு தினசரி ஒரு மணி நேரம், போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் துவக்க விழா, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள அரங்கில் நேற்றுநடந்தது.
இதில், மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், ஆயுதப்படை துணை கமிஷனர் ராஜ் கண்ணா, கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனர் கோகுல்கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் பேசுகையில், ''ஆங்கிலம் மிகவும் முக்கியமான மொழி. உயர் பதவிக்கு செல்லும் போதும், வேறு மாநிலம், நாடுகளுக்கு செல்லும் போதும், ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை உணர முடியும்.
ஆங்கிலம் தெரியாதவர்கள் தங்கள் துறையில், உயர் அதிகாரிகளுடன் பேசுகையில் தயக்கம் ஏற்படுகிறது.
ஆங்கிலம் கற்றுக்கொண்டால், எங்கு சென்றாலும் நமது திறமையை வெளிப்படுத்தி விட முடியும். தயக்கம் இல்லாமல் பேச கற்றுக்கொள்ள வேண்டும். இந்த பயிற்சி வகுப்பை பயன்படுத்தி, போலீசார் நன்கு பேசவும், எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டும்,'' என்றார்.