ADDED : ஜூலை 15, 2026 04:21 PM
வால்பாறை: பருவமழையால் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், நோய்களை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
வால்பாறையில், 25 ஆயிரம் ெஹக்டேரில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இது தவிர, சிறிய அளவில் காபி, ஏலம், மிளகு போன்றவை பயிரிடப்பட்டுள்ளன.
இங்குள்ள எஸ்டேட்களில் தயாரிக்கப்படும் தேயிலை துாள், கோவை, கொச்சி, குன்னுார் போன்ற ஏல மையத்திற்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், வால்பாறையில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்வதால் தேயிலை செடிகள் துளிர்விட்டு, உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இதனையடுத்து தேயிலை செடிகளை பாதுகாக்கும் வகையில் தற்போது, பூச்சி மருந்து தெளிக்கும் பணி நடக்கிறது.
தோட்ட அதிகாரிகள் கூறுகையில், ‘வால்பாறையில் இந்த ஆண்டு முன் கூட்டியே பருவமழை துவங்கியுள்ளதால், தேயிலை செடிகளுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைத்துள்ளது. வெயிலும், மழையும் கலந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், தேயிலை உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தேயிலை செடிகளை தாக்கும் பூச்சிகளிடம் இருந்து, தேயிலை செடிகளை பாதுகாக்க மருந்து தெளிக்கும் பணி நடக்கிறது,’ என்றனர்.
