ADDED : ஜூன் 07, 2026 11:52 PM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: காரமடை அருகே உள்ள குட்டையூரில் தனியார் நிறுவனத்தில் பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வந்தவர் வினோத், 44.
நேற்று முன்தினம் இரவு,10:00 மணிக்கு கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் பெட்டதாபுரம் பாரத் பெட்ரோல் பங்க் அருகே தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த வினோத், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
