/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிவப்பு கம்பளம் விரித்து ஆசிரியர்களுக்கு உற்சாக வரவேற்பு பள்ளி, கல்லுாரிகளில் ஆசிரியர் தினம் கொண்டாட்டம்
/
சிவப்பு கம்பளம் விரித்து ஆசிரியர்களுக்கு உற்சாக வரவேற்பு பள்ளி, கல்லுாரிகளில் ஆசிரியர் தினம் கொண்டாட்டம்
சிவப்பு கம்பளம் விரித்து ஆசிரியர்களுக்கு உற்சாக வரவேற்பு பள்ளி, கல்லுாரிகளில் ஆசிரியர் தினம் கொண்டாட்டம்
சிவப்பு கம்பளம் விரித்து ஆசிரியர்களுக்கு உற்சாக வரவேற்பு பள்ளி, கல்லுாரிகளில் ஆசிரியர் தினம் கொண்டாட்டம்
ADDED : செப் 06, 2024 02:48 AM

ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு, பொள்ளாச்சியில் கல்லுாரி மற்றும் பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
* கோடங்கிப்பட்டி தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமையாசிரியர் தினகரன் தலைமை வகித்தார். ஆசிரியர் சந்தியா வரவேற்றார். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியும், சிறப்பு பாடல் பாடியும் வாழ்த்து தெரிவித்தனர். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சோபனா,உறுப்பினர்கள் வரதராஜன், சத்தியா ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு நோட்டுப்புத்தங்கள், பரிசுப் பொருட்கள் வழங்கினர்.
* பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில், முன்னாள் மாணவர் சங்கம் வாயிலாக, ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) மாணிக்கச்செழியன், தலைமை வகித்தார். தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஸ்ரீநிவாசன் அனைவரையும் வரவேற்றார். கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன், ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார்.
ஆசிரியர்களுக்கு ரங்கோலி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன், உறுப்பினர் பிரபு ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். கல்லுாரி இயக்குனர் சரவணபாபு, புல முதன்மையர் உமாபதி, நிர்வா மேலாளர் ரகுநாதன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கணிதவியல் துறைத் தலைவர் இந்துமதி நன்றி கூறினார்.
* சக்தி தகவல் மேலாண்மை கல்லுாரியில் நடந்த விழாவில், கல்லுாரி இயக்குநர் (பொறுப்பு) சர்மிளா தலைமை வகித்தார். அவர் பேசுகையில், 'மாணவர்களின் திறன்களை மேம்படுத்தி, இன்றைய தொழில்நுட்ப துறைக்கு ஆசியர்களே தயார்படுத்துகின்றனர்,' என்றார். பொள்ளாச்சி நகராட்சி மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் சங்கரவடிவேல் கலந்து கொண்டார்.
* ஆர்.பொன்னாபுரம் நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவில், தலைமையாசிரியர் பாரிஸ்பேகம் தலைமை வகித்தார். ஆசிரியர் சண்முகசுந்தரம் வரவேற்றார். விழாவில், ஆசிரியர் தினத்தின் சிறப்பு குறித்து விளக்கப்பட்டது. மாணவ, மாணவியர் ஆசிரியர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
* கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவில், தாளாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். ஆசிரியர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து, பேண்டு வாத்தியம் முழங்க, மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பள்ளிச் செயலாளர் ரவிச்சந்திரன், முதல்வர் பிரகாஷ், நிர்வாக மேலாளர் பெலிக்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* பொள்ளாச்சி நேதாஜி ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பெற்றோர் -- ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் சித்ராதேவி வரவேற்றார். பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஜெய்லாபுதீன், காளிமுத்து, முருகானந்தம் மற்றும் பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் நடராஜ் முன்னிலை வகித்தனர். சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா, பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவுப்பரிசு மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் இஸ்மாயில் நன்றி கூறினார்.
வால்பாறை
* வால்பாறை, நல்லகாத்து துவக்கப்பள்ளியில் நடந்த விழாவில், மாணவர்கள், தலைமை ஆசிரியர் ரஞ்சித் மற்றும் ஆசிரியர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
* வால்பாறை துாய இருதய ஆரம்ப பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மேகலா தலைமை வகித்தார். விழாவில் ஆசிரியர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு தாளாளர் சவுமியா, திருஇருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுசீலா ஆகியோர் பரிசு வழங்கி, பாராட்டி பேசினர். பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பாசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர்.
* முடீஸ் மத்திய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ் மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பரிசு வழங்கி, ஆசிரியர்களை மகிழ்வித்தனர்.
கிணத்துக்கடவு
* கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பள்ளி மாணவர்கள் ஒன்றிணைத்து நடத்தினார்கள். பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு சார்பில் கேக் வெட்டி ஆசிரியர் தினத்தை கொண்டாடினார்கள்.
* மெட்டுவாவி நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமை ஆசிரியர் மயிலாத்தாள் தலைமை வகித்தார். பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களை அழைத்து வந்து, அரங்கில் அமர வைத்து பூங்கொத்து கொடுத்து மரியாதை செய்து, வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஏன் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம் என மாணவர்களுடன் தலைமை ஆசிரியர் உரையாற்றினார். தொடர்ந்து, மாணவர்கள் வாழ்த்து கவிதைகள் வாசித்தனர். ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கேக் வெட்டி ஆசிரியர் தினத்தை கொண்டாடினார்கள்.
உடுமலை
பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் சரவணன் தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் சுரேஷ்குமார் வரவேற்றார். தொழிற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் 'முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்வும் வரலாறும்' என்ற தலைப்பில் பேசினார்.
ஆசிரியர் ரமேஷ் முன்னிலை வகித்தார். ஆசிரியர் தினத்தையொட்டி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பேனாக்களை பரிசாக வழங்கினர். மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியம், வினாடி-வினா போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர் சுரேஷ் நன்றி தெரிவித்தார்.
* குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், தாளாளர் ஜூலியா, பள்ளி முதல்வர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவர்கள் பரிசு வழங்கினர்.