/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிரியர் தின பேட்டி - தனித்திறன்களை கண்டறியணும்!
/
ஆசிரியர் தின பேட்டி - தனித்திறன்களை கண்டறியணும்!
ADDED : செப் 04, 2024 11:27 PM

தனித்திறன்களை கண்டறியணும்!
பாலமுருகன், தமிழாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, பெத்தநாயக்கனுார்: வகுப்பறைகள் இயந்திரங்களை உண்டாக்கும் கூடங்கள் அல்ல. வகுப்பறைகள் குழந்தைகளை நெறிப்படுத்தி கல்வி கற்பிப்பது, தனித்திறன்களை உலகுக்கு அடையாளம் காட்டும் உன்னதமான கருவறைகள் ஆகும். எந்த மாணவனிடம் என்ன திறமை உள்ளது என கண்டறிவது ஆசிரியர்களின் முக்கிய குணங்களில் ஒன்றாகும். சில மாணவர்களை உற்று நோக்கினாலும், சிலரிடம் உரையாடினாலும், சிலரிடம் தன்னம்பிக்கையாக பேசியும் கண்டறியலாம்.
ஒரு மாணவனின் தனித்திறன்களை வெளிக்கொண்டு வர, ஆசிரியர், மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத்தருபவராக இருத்தல் கூடாது. வாழ்க்கை பாதையை அடையாளம் காட்டுபவராக, தன்னம்பிக்கை ஊட்டுபவராக இருக்க வேண்டும்.இதை மட்டும் ஒரு ஆசிரியர் சரியாக செய்து விட்டால், நாம் கண்டறிந்த மாணவன் நிச்சயமாக உயர்ந்து நிற்பான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.