/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறை கண்காணிப்பாளர் பட்டியல் வெளியிட ஆசிரியர்கள் கோரிக்கை
/
அறை கண்காணிப்பாளர் பட்டியல் வெளியிட ஆசிரியர்கள் கோரிக்கை
அறை கண்காணிப்பாளர் பட்டியல் வெளியிட ஆசிரியர்கள் கோரிக்கை
அறை கண்காணிப்பாளர் பட்டியல் வெளியிட ஆசிரியர்கள் கோரிக்கை
ADDED : பிப் 27, 2025 12:08 AM
கோவை:பொதுத் தேர்வு நெருங்கும் நிலையில், அறைக்கண்காணிப்பாளர் பட்டியலை விரைந்து வெளியிட ஆசிரியர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளியிடம் அளித்த மனு:
மார்ச் 3ம் தேதி முதல் மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன. மாநிலத்தில் பிற மாவட்டங்களில், தேர்வு மைய அறைக்கண்காணிப்பாளர்களுக்கு வழிகாட்டு கூட்டங்கள் நடந்து வருகின்றன. கோவையில் இதுவரை அறைக்கண்காணிப்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை.
கடந்த ஆண்டு, தேர்வுக்கு ஒரு நாள் முன்னர் பட்டியல் வெளியிடப்பட்டதால், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
எனவே, பட்டியலை உடனடியாக வெளியிடவும், மனமொத்த மாறுதல் தொடர்பான ஆசிரியர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து, நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.