ADDED : ஜூலை 25, 2026 06:53 PM

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நடந்த தென்னிந்திய ‘சிக்னேச்சர்’ தேயிலை கண்காட்சி மற்றும் வாங்குவோர், விற்போர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், 300க்கு மேற்பட்ட டீ பார்வைக்கு இருந்தன.
கலப்பட தேயிலை துாளுக்கும், ஒரிஜினல் தேயிலை துாளுக்கும் உள்ள வித்தியாசத்தை செயல் விளக்கம் அளித்தனர். தேயிலையில், 300க்கு மேற்பட்ட வெரைட்டிகள் இருப்பதை பார்த்த பார்வையாளர்கள் வியப்பு அடைந்தனர்.
இந்திய தேயிலை வாரிய குன்னுார் செயல் இயக்குனர் பரணிகுமாரிடம் பேசிய போது, ‘‘முன்பெல்லாம் டீ என்றால் பால் கலந்த டீ அல்லது பால் கலக்காத டீ என, இரண்டு வகையில்தான் டீ குடித்து வந்தனர். இப்போது கிரீன் டீ, ஐஸ் டீ, லெமன் டீ, மசாலா டீ என, பல வெரைட்டிகளில் விற்கப்படுகிறது. ரோஸ் மற்றும் சப்ரான் சுவையிலும் டீ கிடைக்கிறது. இன்றைய Gen Z இளைஞர்கள் ஐஸ் டீ, கிரீன் டீயை ரசித்து குடிக்கின்றனர். அதனால் டீக்கு வெளிநாடுகளில் இருப்பது போலவே நம்ம ஊரிலும் டிமாண்ட் அதிகரித்துள்ளது,’’ என்றார்.
