/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
/
கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
ADDED : பிப் 27, 2025 12:07 AM
கோவை: கோவை, செல்வபுரம், வடக்கு ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் இடையே, முன்விரோதம் ஏற்பட்டது. 2019 ல், ரமேஷ்,32, இவரது நண்பர்கள் கனகராஜ்,35. சுரேஷ்,34 ஆகியோர் சேர்ந்து, ரஞ்சித்குமாரை அரிவாளால் வெட்டினர். படுகாயமடைந்த ரஞ்சித்குமார், சிகிச்சைக்கு பிறகு உயிர்பிழைத்தார்.
செல்வபுரம் போலீசார் விசாரித்து, மூவரையும் கைது செய்து, கோவை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணையின் போது, ரமேஷ் இறந்து விட்டதால், மற்ற இருவர் மீது தொடர்ந்து விசாரணை நடந்தது.
விசாரித்த நீதிபதி கலைவாணி, குற்றம்சாட்டப்பட்ட கனகராஜூக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். சுரேஷ் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார்.