/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கன்னிமுத்து மாரியம்மன் கோவிலில் தீர்த்தக்காவடி
/
கன்னிமுத்து மாரியம்மன் கோவிலில் தீர்த்தக்காவடி
ADDED : ஆக 15, 2024 11:49 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, குமரன் நகர் கன்னிமுத்து மாரியம்மன் கோவிலில், 31ம் ஆண்டு தீர்த்தக்காவடி விழா நடக்கிறது.
பொள்ளாச்சி குமரன் நகர், முதல் லே -- அவுட்டில் கன்னிமுத்து மாரியம்மன் கோவிலில், 31ம் ஆண்டு தீர்த்தக்காவடி விழா நேற்று துவங்கியது.
கோவிலில் இருந்து புறப்பட்டு, மடத்துக்குளம் அருகே கடத்துார் அமராவதி ஆற்றங்கரை அர்ச்சனேஸ்வரர் கோவிலில், தீர்த்தம் முத்தரித்து புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, நேதாஜி ரோடு விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, கன்னிமுத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
இன்று காலை, 11:00 மணிக்கு விநாயகர், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், கருப்பராய சுவாமி, கன்னிமுத்து மாரியம்மனுக்கும் தீர்த்தம் செலுத்துதல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு, அபிேஷக அலங்கார பூஜைகள் நடக்கின்றன.
தொடர்ந்து நாளை (17ம் தேதி) மாலை, 4:00 மணிக்கு சுவாமிகளுக்கு மஞ்சள் நீராட்டு பூஜைகள் நடக்கின்றன.

