/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீசிடம் தப்ப முயன்ற ரவுடியின் கூட்டாளிகள் கால் முறிந்து படுகாயம்
/
போலீசிடம் தப்ப முயன்ற ரவுடியின் கூட்டாளிகள் கால் முறிந்து படுகாயம்
போலீசிடம் தப்ப முயன்ற ரவுடியின் கூட்டாளிகள் கால் முறிந்து படுகாயம்
போலீசிடம் தப்ப முயன்ற ரவுடியின் கூட்டாளிகள் கால் முறிந்து படுகாயம்
ADDED : ஆக 19, 2024 10:43 PM

அன்னூர்;போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்ற ரவுடிகள் இருவர், கால் முறிந்து படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கோவை மாவட்டம், கோவில்பாளையம், லட்சுமி கார்டனை சேர்ந்தவர் கோகுல், 22; பிரபல ரவுடி. 2023ம் ஆண்டு பிப்.,14ம் தேதி ஒரு வழக்கில், ஆஜர் ஆவதற்காக கோவை கோர்ட்டுக்கு வந்தபோது ஒரு கும்பல் பட்டப் பகலில், இவரை கொலை செய்தது.
கோகுலின் நெருங்கிய கூட்டாளிகள், கொண்டையம்பாளையம், ரவி, என்கிற ரவீந்திரன், 23. காப்பிக் கடை நந்தகுமார், 27. திருப்பூர் சிராஜுதீன், 23.
இதில் ரவீந்திரன் மீது, 10, சிராஜுதின் மீது ஆறு, நந்தகுமார் மீது ஐந்து வழக்குகள் உள்ளன. வழிப்பறி, கஞ்சா விற்பனை என பல ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளன.
கடந்த ஜூன் 24ம் தேதி, குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் மாணவர்களை தாக்கினர்.
இந்த சம்பவத்தில், கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆறு பேரை கைது செய்தனர். மேலும் ரவி, நந்த குமார், சிராஜிதீன் ஆகிய மூவரை தேடி வந்தனர்.
கோவில்பாளையம் போலீஸ் எஸ்.ஐ.,கள் செல்வ நாயகம், அரவிந்தராஜன் உள்ளிட்ட நான்கு போலீசார் தலைமையிலான தனிப்படை, இமாச்சலப் பிரதேசம் மாநிலம் சிம்லாவில், மூன்று பேரையும் கைது செய்து, கோவில்பாளையம் அழைத்து வந்தனர்.
விசாரணையில், தாங்கள் ஆயுதங்களை காளப்பட்டி அருகே, ஏரோ சிட்டியில் வைத்திருப்பதாக கூறினர். அங்கு இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் போலீசார் சென்றனர்.
அப்போது நந்தகுமார் மற்றும் ரவி என்கிற ரவீந்திரன் இருவரும், போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினர். அப்போது கீழே விழுந்து, இருவருக்கும் காலில் முறிவு ஏற்பட்டது.
போலீசார், அவர்களை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிராஜுதீன் அன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.