/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொத்து பிரச்னையால் தீக்குளித்தவர் உயிரிழப்பு
/
சொத்து பிரச்னையால் தீக்குளித்தவர் உயிரிழப்பு
ADDED : ஜூலை 24, 2024 12:25 AM

பாலக்காடு;பாலக்காடு அருகே, சொத்து பிரச்னை காரணமாக, தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், தேங்குறுச்சி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 48. வெளிநாட்டில் பணிபுரியும் இவரது மனைவி ஷீஜ. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், இவருக்கும், சகோதரருக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. வழக்குக்கு உரிய கட்டடத்தில் சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
நேற்று, அந்த கட்டடத்தில் வசிக்க கூடாது என கூறி சதீஷ்குமார் கூறிய போது, சகோதரர் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து, வீட்டின் முன்பாக, உடலில் பெட்ரோல் ஊற்றி சதீஷ்குமார் தீக்குளித்தார்.
உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் அவரை உறவினர்கள் மீட்டு, மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, குழல்மன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

