/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'படிப்புக்கான சிறந்த உடற்பயிற்சி விளையாட்டை தவிர வேறில்லை'
/
'படிப்புக்கான சிறந்த உடற்பயிற்சி விளையாட்டை தவிர வேறில்லை'
'படிப்புக்கான சிறந்த உடற்பயிற்சி விளையாட்டை தவிர வேறில்லை'
'படிப்புக்கான சிறந்த உடற்பயிற்சி விளையாட்டை தவிர வேறில்லை'
ADDED : ஆக 28, 2024 11:31 PM

''படிப்புக்கான மிகச்சிறந்த உடற்பயிற்சியே விளையாட்டு தான்,'' என, பெருமிதம் தெரிவிக்கிறார், முன்னாள் சர்வதேச தடகள வீரர் சங்கர்.
அவர் கூறியதாவது:
பள்ளி மற்றும் கல்லுாரிகளில், விளையாட்டு ஒரு பாடமாகவே உள்ளது எல்லோருக்கும் தெரிந்ததே. இது, வெறும் விளையாட்டுக்காக மட்டுமல்ல. ஒருவர் படிப்பை எளிதாக படிக்க உதவும் ஒரு விஷயம் விளையாட்டு.
விளையாடும் போது, மனம் ஒரு நிலையாக இருக்கும். நாளடைவில் அதே விஷயம் படிப்பிலும் சேரும் போது, மனதில் சிறப்பாக பதியும். உடல் ஆரோக்கியமும் பலம் பெறும்.
ஆரோக்கியமாக இருந்தால் தானே படிப்பு உட்பட, எல்லா விஷயங்களையும் சிறப்பாக முடிக்க முடியும். தொடர் பயிற்சி இருந்தால், 50 அல்லது 60 வயதை தாண்டும் போது, நோய் நொடி இல்லாமல் தற்காத்துக் கொள்ள முடியும். விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல், வாழ்க்கையின் ஒரு அங்கமாக பார்க்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
சங்கர், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள இந்தியன் வங்கியில், சீனியர் மேனேஜராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

