தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தீப்பொறி கிளப்பிய சிறுவர்கள் மன்னிப்பு

தீப்பொறி கிளப்பிய சிறுவர்கள் மன்னிப்பு

தீப்பொறி கிளப்பிய சிறுவர்கள் மன்னிப்பு


ADDED : ஜூலை 19, 2026 05:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2026 05:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை – பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், 17ம் தேதி நள்ளிரவு (18ல்) ஏலுார் பிரிவில் ஸ்கூட்டர், பைக்குகளில் சென்ற சிறுவர்கள், இரும்பு ராடை பயன்படுத்தி, தீப்பொறி ஏற்படுத்தினர். இதன் வீடியோ பரவியதால் பலர், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

போலீஸ் விசாரணையில், கிணத்துகடவு, கோவில்பாளையத்தை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள், 11 பேர் இச்செயலில் ஈடுபட்டது தெரிந்தது.

17, 16, 16, 17, 16 வயதுடைய சிறுவர்கள், பெற்றோர் செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் வரவழைக்கப்பட்டனர். ஐந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இன்ஸ்பெக்டர் செல்வராகவன் அவர்களிடம், ‘‘ஆசையாக கேட்கிறார்கள் என்பதற்காக பெற்றோர் பைக் ஓட்ட விடுகின்றனர். விபத்து ஏற்பட்டால் பாதிப்பு சிறுவர், சிறுமியருக்குத்தான். 18 வயதிற்குட்பட்டோருக்கு வாகனம் ஓட்ட கொடுத்தால் பெற்றோருக்கு குறைந்தபட்சம், ரூ.25 ஆயிரம் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும்,’’ என்றார்.

சிறுவர்கள் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us