sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பட்டாம் பூச்சி பூங்கா பார்த்து மகிழ மட்டுமே; கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வேண்டுகோள்

/

பட்டாம் பூச்சி பூங்கா பார்த்து மகிழ மட்டுமே; கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வேண்டுகோள்

பட்டாம் பூச்சி பூங்கா பார்த்து மகிழ மட்டுமே; கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வேண்டுகோள்

பட்டாம் பூச்சி பூங்கா பார்த்து மகிழ மட்டுமே; கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வேண்டுகோள்


ADDED : ஆக 15, 2024 11:54 PM

Google News

ADDED : ஆக 15, 2024 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : ''பட்டாம்பூச்சி பூங்காவை காண வருவோர், அதன் நோக்கம் அறிந்து, ஒத்துழைக்க வேண்டும்,'' என, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீர்வளத்துறையின் அனுமதியுடன், 'மிலாக்ரான்' தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியுதவியுடன், கோவை வெள்ளலுார் குளக்கரையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் அமைக்கப்பட்டுள்ள பட்டாம்பூச்சி பூங்கா, கடந்த 8ம் தேதி திறக்கப்பட்டது.

இங்கு மட்டும், 103 வகை பட்டாம்பூச்சிகள் இருப்பது கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன.

பட்டாம்பூச்சி வகைகளை பாதுகாக்க வேண்டும் என்பன உட்பட பல தகவல்களை தெரிவிக்கும் வகையில், தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. பூங்கா திறப்புக்கு பின், பள்ளி, கல்லுாரி, பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பூங்காவை கண்டுகளித்துள்ளனர்.

இந்நிலையில், பூங்காவுக்கு வருவோர் சிலர், செடிகளை சேதப்படுத்துவதும், பட்டாம்பூச்சிகளை பிடிப்பதுமாக உள்ளனர்.

இதுகுறித்து, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறியதாவது:பட்டாம்பூச்சிகளின் குணம், வாழ்க்கை குறித்து தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அது, பட்டாம்பூச்சிகள் குறித்து தெரிந்து கொள்ள வருவோருக்கு உபயோகமாக இருக்கும். சில நாட்களாக, வெளியூரில் இருந்து வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இம்மாதம் முழுவதும், பூங்காவை காண, பல பள்ளிகளில் இருந்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், சிலர், பூச்செடிகளை சேதப்படுத்துவதும், ஓவியங்கள் மீது கால் வைப்பதும், பட்டாம்பூச்சிகளை பிடிப்பதுமாக இருக்கின்றனர். இது, எங்களுக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்துகிறது. எனவே, பட்டாம்பூச்சி பூங்காவுக்கு வருவோர், இதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.

பட்டாம்பூச்சி அமைத்ததற்கான நோக்கம் முழுவதுமாக நிறைவேற, இங்கு வருவோரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us