/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண்டலம் தோறும் 50 பேர் அடங்கிய மீட்பு குழு தயார் நிலையில் இருக்க மாநகராட்சி உத்தரவு
/
மண்டலம் தோறும் 50 பேர் அடங்கிய மீட்பு குழு தயார் நிலையில் இருக்க மாநகராட்சி உத்தரவு
மண்டலம் தோறும் 50 பேர் அடங்கிய மீட்பு குழு தயார் நிலையில் இருக்க மாநகராட்சி உத்தரவு
மண்டலம் தோறும் 50 பேர் அடங்கிய மீட்பு குழு தயார் நிலையில் இருக்க மாநகராட்சி உத்தரவு
ADDED : மே 20, 2024 12:23 AM
கோவை;மாநகராட்சி பகுதிகளில் மழை பாதிப்பு சமயத்தில் விரைந்து செல்படும் விதமாக மண்டலத்துக்கு, 50 பேர் அடங்கிய மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
கோவைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்துவருகிறது. நேற்று முன்தினம் பெய்த மழைக்கு அவிநாசி ரோடு மேம்பாலம், லங்கா கார்னர், கிக்கானி பள்ளி அருகே ரயில்வே பாலம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது.
போக்குவரத்து மிக்க அவிநாசி ரோடு மேம்பாலத்தில் தேங்கியிருந்த தண்ணீர், 100 எச்.பி., திறனுடைய இரு மோட்டார்கள் வாயிலாக வெளியேற்றப்பட்டது. மற்ற பகுதிகளிலும் மழை நீரை விரைந்து வெளியேற்றும் விதமாக மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மண்டலத்திலும் உதவி கமிஷனர்கள் தலைமையில் சுகாதார அலுவலர், உதவி செயற்பொறியாளர், சுகாதார ஆய்வாளர், துாய்மை பணியாளர்கள் என, 50 பேர் அடங்கிய மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் பாதிப்புள்ள பகுதிகளுக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபடுவர்.
மேலும், அவசர நிலைக்காக கழிவு நீர் அகற்றும் வாகனம், மோட்டார்கள், மரம் அறுக்கும் இயந்திம் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர், 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்குமாறு மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,'மண்டலம் தோறும், 50 பேர் அடங்கிய மீட்பு குழு தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், வார்டிலும் சுகாதார ஆய்வாளர் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர்கள், துாய்மை பணியாளர்கள் அடங்கிய குழு செயல்படும். பாதிப்பு தகவல்கள் கிடைத்தவுடன் அவர்கள் விரைந்து சென்று அரை மணி நேரத்துக்குள் தீர்வுகாண அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.

