sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

களம் இறங்கியது கார்ப்பரேஷன் டீம் மழைநீர் செல்ல தடைகள் அகற்றம்! * தொடர்ச்சியாக பணிகள் நடந்தால் குளங்களுக்கு பாயும் மழை வெள்ளம்

/

களம் இறங்கியது கார்ப்பரேஷன் டீம் மழைநீர் செல்ல தடைகள் அகற்றம்! * தொடர்ச்சியாக பணிகள் நடந்தால் குளங்களுக்கு பாயும் மழை வெள்ளம்

களம் இறங்கியது கார்ப்பரேஷன் டீம் மழைநீர் செல்ல தடைகள் அகற்றம்! * தொடர்ச்சியாக பணிகள் நடந்தால் குளங்களுக்கு பாயும் மழை வெள்ளம்

களம் இறங்கியது கார்ப்பரேஷன் டீம் மழைநீர் செல்ல தடைகள் அகற்றம்! * தொடர்ச்சியாக பணிகள் நடந்தால் குளங்களுக்கு பாயும் மழை வெள்ளம்


ADDED : மே 22, 2024 01:12 AM

Google News

ADDED : மே 22, 2024 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

-நமது நிருபர்-

'தினமலர்' செய்தி எதிரொலியாக, கோவை நகருக்குள் மழைநீர் வடிகால்களில் உள்ள தடைகளை அகற்றும் பணி துவங்கியுள்ளது.

சிறிய மழை பெய்தாலே, கோவை நகருக்குள் ரோடுகள் மற்றும் பாலங்களில் பெரும் வெள்ளம் தேங்குவதும், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

மாநகராட்சிப் பகுதிக்குள் அமைந்துள்ள குளங்களில், கழிவுநீர் தேங்கியிருப்பதும், மழை வெள்ளம் வீணாவதும் ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது.

நகருக்குள் உள்ள நொய்யல் ஆறு, கால்வாய்கள், சங்கனுார் ஓடை ஆகியவற்றில் ஆக்கிரமிப்பு, மண், செடி, கொடிகள் அடைப்பு, சாக்கடை கலப்பு மற்றும் குப்பைகள் குவிப்பு போன்ற காரணங்களால், மழை வெள்ளம் போக வழியில்லை; பாதாள சாக்கடைப் பணியும் முழுமையாக முடிவடையவில்லை.இதனால் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் பாய்கிறது.

நகருக்குள் துண்டு துண்டாக அமைந்துள்ள மழைநீர் வடிகால்களும், மண் மற்றும் குப்பைகளாலும், நிரந்தர கான்கிரீட் தளங்களாலும் மூடப்பட்டுள்ளன.

மழைநீர் வடிகால்களுக்கும், நகருக்குள் அமைந்துள்ள குளங்களுக்கும் இடையில் சரியான இணைப்பு இல்லாததால், நகருக்குள் மழை பெய்யும்போது, ரோட்டில் பாயும் வெள்ளம், வடிகால் வழியாக குளங்களைச் சென்றடைவதில்லை.

இது தொடர்பாக, 'மழை மீதில்லை பிழை' என்ற தலைப்பில், நமது நாளிதழில் நேற்று முன் தினம், படத்துடன் செய்தி வெளியானது.

அதன் எதிரொலியாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மழைநீர் பாயும் வழிகளில் உள்ள தடைகளை அகற்ற, இன்ஜினியர்களுக்கு உத்தரவிட்டார். அவரும் நேரடியாகக் களம் இறங்கி, பல இடங்களையும் ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கினார்.

மாநகராட்சி தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய மண்டலத்துக்குட்பட்ட சாரதா மில் ரோடு, நுாராபாத், போத்தனுார் உம்மர் நகர், சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட், காளீஸ்வரா மில் ரோடு கீழ்பாலம், ராம்நகர் அன்சாரி வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், நீர் வழித்தடங்கள், பாதாள சாக்கடை மற்றும் மழை நீர் வடிகால்களில், அவர் ஆய்வு மேற்கொண்டார்.

அவற்றில் அடைபட்டிருந்த மண், குப்பை ஆகியவற்றை அகற்ற நடவடிக்கை எடுத்ததுடன், கான்கிரீட் தளங்களை அகற்றவும், சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வினியோகிக்கவும், உத்தரவு பிறப்பித்தார்.

கமிஷனரின் நேரடி ஆய்வு காரணமாக, இவற்றில் தேங்கியிருந்த மண் மற்றும் குப்பை அகற்றப்பட்டு, வண்டி வண்டியாக எடுத்துச் செல்லப்பட்டன.

மாநகராட்சி பொறியாளர் அன்பழகன், உதவி கமிஷனர்கள் இளங்கோ, கவிதா, செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர்கள் கனகராஜ், ஹேமலதா, பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர்கள் ஆண்டியப்பன், பரமசிவம், குணசேகரன் மற்றும் உதவிப் பொறியாளர்கள் ஆகியோர் களம் இறங்கி, மாநகராட்சி அலுவலர்கள் உதவியுடன், இந்தப் பணிகளை மேற்கொண்டனர்.

இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரே நாளில் இந்தப் பணிகளை முடிப்பது இயலாது; நீர்வழித்தடங்கள், பாதாள சாக்கடை மற்றும் மழை நீர் வடிகால் ஆகியவை, நீர்நிலைகளுக்குச் செல்லும் பாதையைக் கணக்கிட்டு, இடையிலுள்ள தடைகளை அகற்றுவதோடு, அறுபட்ட இடங்களில் மாற்று வழிகளையும் உருவாக்கி, குளங்களுக்குத் தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதைச் செய்து முடித்தால், இந்த ஆண்டிலாவது மழை வெள்ளம் குளங்களுக்குள் பாய்வதை உறுதி செய்யலாம்!






      Dinamalar
      Follow us