/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டு எண்ணும் மைய கேமராக்கள்: 10 நிமிடங்கள் ஒளிபரப்பு பாதிப்பு
/
ஓட்டு எண்ணும் மைய கேமராக்கள்: 10 நிமிடங்கள் ஒளிபரப்பு பாதிப்பு
ஓட்டு எண்ணும் மைய கேமராக்கள்: 10 நிமிடங்கள் ஒளிபரப்பு பாதிப்பு
ஓட்டு எண்ணும் மைய கேமராக்கள்: 10 நிமிடங்கள் ஒளிபரப்பு பாதிப்பு
ADDED : மே 08, 2024 12:40 AM
கோவை:கோவையில் ஓட்டு எண்ணப்படும் ஜி.சி.டி., கல்லுாரியில் பொருத்தியுள்ள 'சிசி டிவி' கேமராக்களில், 10 நிமிடங்கள் ஒளிபரப்பு தடைபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
கோவை லோக்சபா தொகுதியில் பயன்படுத்திய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஜி.சி.டி., கல்லுாரியில் உள்ள 'ஸ்ட்ராங் ரூம்'களில் வைக்கப்பட்டுள்ளன. மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. வளாகம் முழுவதும், 250 'சிசி டிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவற்றை கண்காணிக்க, கல்லுாரி வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் தரப்பில் மூன்று 'ஷிப்ட்' அடிப்படையில் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதேபோல், வேட்பாளர்கள் தரப்பில் ஏஜன்ட்டுகள் உள்ளனர். இவர்களுக்காக தகர கூடாரம் அமைக்கப்பட்டு, மூன்று 'டிவி' மானிட்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. காற்று வீசியபோது, வெளிப்பகுதியில் அமைத்திருந்த கேமராக்களுக்கு கொடுத்திருந்த ஒயர் இணைப்புகள் துண்டாகின. இதன் காரணமாக, 10 நிமிடங்கள் 'சிசி டிவி' கேமரா ஒளிபரப்பு பாதிக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
'ஸ்ட்ராங் ரூம்'களுக்கான கேமராக்களுக்கு பிரத்யேக இணைப்பு வழங்கப்பட்டுள்ளது; மின் தடை ஏற்பட்டாலும், பேட்டரியால் இயங்கக்கூடிய சக்திவாய்ந்த கேமரா பொருத்தியுள்ளதால், அப்பகுதிக்கான காட்சிகள் ஒளிபரப்பு தடையாகவில்லை.
மற்ற பகுதிகளில் ஒளிபரப்பு, 10 நிமிடங்கள் தடைபட்டது அறிந்ததும், மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார், ஜி.சி.டி., கல்லுாரிக்கு விரைந்து சென்றார். சூறாவளி காற்றுக்கு ஒயர் இணைப்பு துண்டானது தெரியவந்தது. அங்கு முகாமிட்டுள்ள அலுவலர்கள் விரைந்து பணியாற்றி, கேமரா இயக்கத்தை சரி செய்தனர். கோவை வடக்கு தொகுதிக்கான 'ஸ்ட்ராங் ரூம்' பின்புற கட்டடத்தின் மாடியின் ஜன்னல் பகுதியில் இருந்த ஒரே ஒரு கேமராவுக்குள் மழை நீர் சென்றதால் பழுதானது; அதற்கு பதிலாக வேறொரு கேமரா பொருத்தப்பட்டதாக, அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.

