/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிடணும்!' தீர்மானங்கள் நிறைவேற்றம்

ADDED : ஆக 07, 2024 10:52 PM

பொள்ளாச்சி : தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின், பொள்ளாச்சி கோட்ட பேரவை கூட்டம், வங்கி ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்தது. கோட்டத் தலைவர் வெற்றிவேல் தலைமை வகித்தார்.
முன்னதாக, துணைத் தலைவர் வெள்ளியங்கிரி, அனைவரையும் வரவேற்றார். மாநிலச் செயலாளர் சிங்கராயன் முன்னிலையில், கோட்டச் செயலாளர் ஜெகநாதன் அறிக்கையையும், பொருளாளர் மாரிமுத்து வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தனர்.
கூட்டத்தில், சாலைப் பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை பிறப்பிக்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதால், 3,500 சாலைப் பணியாளர் பணியிடங்கள் ஒழிக்கப்படும். கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு கிடைக்காது.
தனியார் நிறுவனத்தார், சுங்கவரி வசூலிக்க அனுமதிக்க கூடாது. மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்கு உரிய ஊதிய மாற்றம் வேண்டும்.
சாலைப் பணியாளர்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு, கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியம், மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.