/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கலெக்டர் அறிவுறுத்தியும் ஆக்கிரமிப்பு அகலவில்லை'
/
'கலெக்டர் அறிவுறுத்தியும் ஆக்கிரமிப்பு அகலவில்லை'
ADDED : ஆக 06, 2024 11:41 PM
அன்னுார் : 'கலெக்டர் அறிவுறுத்தியும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை' என, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வடக்கலூர் ஊராட்சி, மூக்கனுார் கிராமத்தில், அழகேபாளையம் செல்லும் சாலையில், நத்தம் புறம்போக்கு மற்றும் மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில், சிலர் ஆக்கிரமிப்பு செய்து, கட்டடம் கட்டி உள்ளனர். இதனால் இந்த வழித்தடத்தில் செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இப்பகுதி மக்கள் சார்பில், முதல்வரின் தனிப்பிரிவு, கோவை கலெக்டர் மற்றும் அன்னூர் தாசில்தாருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்த சித்தப்பன் என்பவர் கூறுகையில், ''முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினால், உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்து தாலுகா அலுவலகம் அனுப்பி வைக்கின்றனர். ஆனாலும் அது கிடப்பில் போடப்படுகிறது. இரு மாதங்களுக்கு முன், ஆக்கிரமிப்பு அகற்றும் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, கோவை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, அன்னுார் தாசில்தார் மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளருக்கும் அறிவுறுத்தி கடிதம் அனுப்பி இருந்தனர். ஆனால் அதன் பிறகும் நடவடிக்கை இல்லை. ஆக்கிரமிப்பு அகற்றுவதில், வருவாய் துறையும், நெடுஞ்சாலை துறையும் அலட்சியமாக உள்ளன' என்றார்.