/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுலா பயணியர் இன்றி வெறிச்சோடியது படகு இல்லம்
/
சுற்றுலா பயணியர் இன்றி வெறிச்சோடியது படகு இல்லம்
ADDED : செப் 12, 2024 08:40 PM

வால்பாறை, : வால்பாறை வரும் சுற்றுலா பயணியர், அட்டகட்டி ஆர்க்கிட்டோரியம், டைகர் பால்ஸ், கவர்க்கல் வீயூ பாய்ன்ட், நல்லமுடி பூஞ்சோலை, சோலையாறு அணை உள்ளிட்டபகுதிகளை கண்டு ரசிக்கின்றனர்.
வால்பாறையில் கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை துவங்கியதால், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து வால்பாறையில் உள்ள ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், வால்பாறையில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவும், பகலில் வெயிலும் நிலவுகிறது. இரவு நேரங்களில் கடுங்குளிர் உள்ளது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால், சுற்றுலா பயணியர் வருகை வெகுவாக குறைந்துள்ளது. இதனால், வால்பாறை நகரில் உள்ள படகு இல்லம், தாவரவியல்பூங்கா, நல்லமுடி காட்சிமுனை உள்ளிட்ட பகுதிகளில், சுற்றுலா பயணியர் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.