/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளியங்காடு பள்ளியில் சேர மாணவர்கள் ஆர்வம்: கடந்த ஆண்டை விட சேர்க்கை அதிகம்
/
வெள்ளியங்காடு பள்ளியில் சேர மாணவர்கள் ஆர்வம்: கடந்த ஆண்டை விட சேர்க்கை அதிகம்
வெள்ளியங்காடு பள்ளியில் சேர மாணவர்கள் ஆர்வம்: கடந்த ஆண்டை விட சேர்க்கை அதிகம்
வெள்ளியங்காடு பள்ளியில் சேர மாணவர்கள் ஆர்வம்: கடந்த ஆண்டை விட சேர்க்கை அதிகம்
ADDED : மே 30, 2024 11:25 PM
மேட்டுப்பாளையம்;வெள்ளியங்காடு அரசு பள்ளியில் சேர மாணவ, மாணவிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காட்டில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 900 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளி 10ம் வகுப்பு பொது தேர்வில் 2024ம் ஆண்டு 99 சதவீதம் தேர்ச்சியும், 12ம் வகுப்பு பொது தேர்வில், 99 சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளது. இதன் காரணமாக தற்போது மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் சேர அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஆண்டு 9ம் வகுப்பில் தற்போது வரை 162 பேர் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு 143 பேர் சேர்ந்தனர்.
10ம் வகுப்பில் தற்போது வரை 138 பேர் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு 142 பேர் சேர்ந்தனர். 11ம் வகுப்பில் தற்போது வரை 110 பேர் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு 90 பேர் சேர்ந்தனர். 12ம் வகுப்பில் தற்போது வரை 88 பேர் சேர்ந்தனர். கடந்த ஆண்டு 98 பேர் சேர்ந்தனர்.
இதுகுறித்து இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சாக்ரடீஸ் குலசேகரன் கூறுகையில், 'பள்ளி ஆசிரியர்கள் 30 பேரும் மாணவ, மாணவிகள் மீது அன்பும், அக்கறையும் கொண்டு பாடங்களை நடத்துகின்றனர்.
படிப்பில் பின் தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துகின்றனர். 10ம் வகுப்பு, 12ம் வகும்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. நீட் தேர்வுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. ஒழுங்கு என்பது இங்கு மிகவும் கண்டிப்பாக கடைபிடிக்கப்படுகிறது. நீட் தேர்வு பயிற்சிக்கு வெளியிடங்களில் கூட கட்டணம் செலுத்தி மாணவர்களை ஸ்பான்சர்கள் படிக்க வைக்கின்றனர்' என்றார்.
ஆசிரியர்கள் பற்றாக்குறை-
இப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை. குறிப்பாக சமூக அறிவியல், ஆங்கிலம், உடற்கல்வி பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் மிகவும் குறைந்த அளவே உள்ளனர். இப்பரிவுகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.---