/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதர் சூழ்ந்திருந்த நுாலகம் சுத்தமானது
/
புதர் சூழ்ந்திருந்த நுாலகம் சுத்தமானது
ADDED : செப் 06, 2024 02:51 AM

வால்பாறை;'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, வால்பாறையில் நுாலகத்தை சுற்றியுள்ள புதர்கள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.
வால்பாறை நகரில் அமைந்துள்ள நுாலகத்துக்கு, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வாசகர்கள் அதிக அளவில் வருகின்றனர். இதுதவிர, பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களும், நுாலகத்துக்கு வருகின்றனர்.
இந்நிலையில், நுாலக கட்டடத்தின் மேல்பகுதி போதிய பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டிக்கிடந்தது. நுாலகத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புக்கள் அதிக அளவில் உள்ளன. புதர் சூழ்ந்த நுாலகம், பாழடைந்த மண்டபம் போல் காட்சியளித்தது.
இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில், கடந்த, 2ம் தேதி செய்தி செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, நுாலகத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, புதர்களை உடனடியாக அகற்றினர்.அதிகாரிகளின் நடவடிக்கைக்கு, வாசகர்கள் நன்றி தெரிவித்தனர்.