/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண் மீது மிளகாய் பொடி தூவி நகை பறித்தவர் கைது
/
பெண் மீது மிளகாய் பொடி தூவி நகை பறித்தவர் கைது
ADDED : ஆக 13, 2024 01:22 AM
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பெத்திக்குட்டையை சேர்ந்தவர் வசந்தா, 49. டெய்லர். இவரது கணவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்.
கடந்த 9ம் தேதி, வசந்தா வீட்டில் துணி தைத்து கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், முகத்தை வெள்ளை துணியால் மூடிக்கொண்டு, வீட்டிற்குள் நுழைந்து, வசந்தா மீது மிளகாய் பொடியை தூவினார். பின் அவரது கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்தார். உடனே வசந்தா செயினை பிடிக்க, செயின் துண்டித்து, பாதி செயின் வசந்தாவின் கையில் மாட்டிக்கொண்டது. ஆனாலும் 12 கிராம் தங்க நகையை மர்ம நபர் பறித்துக் கொண்டு தப்பி விட்டார்.
இதுகுறித்து, வசந்தா அளித்த புகாரின் பேரில் சிறுமுகை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வந்தனர். விசாரணையில், செயினை பறித்து சென்றது, காரமடையை சேர்ந்த சர்தார், 41, என தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன் தினம், அவரை சிறுமுகை போலீசார் கைது செய்தனர்.

