தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பொய்த்தது பருவமழை நிரம்பாத பில்லூர் அணை: வறண்டது பவானி ஆறு

பொய்த்தது பருவமழை நிரம்பாத பில்லூர் அணை: வறண்டது பவானி ஆறு

பொய்த்தது பருவமழை நிரம்பாத பில்லூர் அணை: வறண்டது பவானி ஆறு


UPDATED : ஜூலை 23, 2026 05:20 AM

ADDED : ஜூலை 22, 2026 06:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2026 05:20 AM ADDED : ஜூலை 22, 2026 06:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: தென்மேற்கு பருவமழை பெய்யாததால், பில்லூர் அணையின் நீர்மட்டம் குறைந்து, பவானி ஆற்றுக்கு நீர்வரத்து மிகவும் குறைந்துள்ளது.

பில்லூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், கேரளாவிலும் எதிர்பார்த்த பருவமழை இல்லை. இதன் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. 100 அடி கொள்ளளவு கொண்ட அணையின் தற்போதைய நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 86 அடியாக உள்ளது. நீர்வரத்து, வினாடிக்கு வெறும் 21 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவது குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே ஜூலை மாதம் பில்லூர் அணை 100 அடி கொள்ளளவை நான்கு முறை எட்டியது. அணையின் நான்கு ஷட்டர் வழியாக சுமார் வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி வரை, நீர் வெளியேற்றப்பட்டது. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஒரு முறை கூட பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டவில்லை.

இதுகுறித்து, மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வின் கூறுகையில், 'கோடை காலத்தில் பவானி ஆற்றில் நீர்வரத்து குறைவது போல், தற்போது பருவமழை காலத்திலும் நீர்வரத்து குறைந்துள்ளது. குடிநீருக்கு தற்போது பிரச்சனை இல்லை. ஆனால் இனி வரும் நாட்களில், ஏற்பட வாய்ப்புள்ளதால், மேட்டுப்பாளையம் மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது' என்றார்.

பவானி ஆறு, பில்லூர் அணையில் இருந்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு 14க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us