/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நட்சத்திர தொகுதியானது நீலகிரி: மும்முனை போட்டியால் பரபரப்பு
/
நட்சத்திர தொகுதியானது நீலகிரி: மும்முனை போட்டியால் பரபரப்பு
நட்சத்திர தொகுதியானது நீலகிரி: மும்முனை போட்டியால் பரபரப்பு
நட்சத்திர தொகுதியானது நீலகிரி: மும்முனை போட்டியால் பரபரப்பு
ADDED : மார் 26, 2024 10:20 PM
அன்னுார்;தற்போதைய மத்திய அமைச்சர், முன்னாள் மத்திய அமைச்சர், ஏழு முறை எம்.எல்.ஏவாக இருந்த தனபாலின் மகன் ஆகிய மூன்று பேர் போட்டியிடுவதால் நீலகிரி தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறி உள்ளது.
நீலகிரி தொகுதியில் 1957 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற 16 தேர்தல்களில் அதிகபட்சமாக காங்., ஏழு முறையும், தி.மு.க., மூன்று முறையும், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., தலா இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளன. சுதந்திரா கட்சி ஒரு முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் அதிகபட்சமாக பிரபு ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார். 1987 முதல் 89 வரை ரசாயனம் மற்றும் உரத்துறை மத்திய இணை அமைச்சராக பதவி வகித்துள்ளார். தமிழ் மாநில காங்., சார்பில் 1996 இல் வென்ற எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் ஒன்றரை ஆண்டுகள் மத்திய இணை அமைச்சராக பதவி வகித்தார்.
ராஜா இங்கு 2009ல் வெற்றி பெற்ற பிறகு ஒன்றரை ஆண்டு மட்டுமே மத்திய அமைச்சராக பதவி வகித்தார். அதன் பிறகு 2ஜி வழக்கு காரணமாக 14 மாதங்கள் சிறைக்கு சென்றார். இப்போது நீலகிரி தொகுதி தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் தொகுதிகளில் ஒன்றாக உருவாகியுள்ளது.
மத்திய கால்நடை பராமரிப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் பா.ஜ., சார்பில் இங்கு போட்டியிடுகிறார். தி.மு.க., சார்பில் பெரம்பலூரில் மூன்று முறையும், நீலகிரி தொகுதியில் இரண்டு முறையும், வெற்றி பெற்ற, நான்கு முறை மத்திய அமைச்சராக இருந்த ராஜா போட்டியிடுகிறார்.
சங்ககிரி, ராசிபுரம், அவிநாசி என மூன்று தொகுதிகளில், மொத்தம் ஏழு முறை வெற்றி பெற்று இரண்டு முறை சபாநாயகராக பதவி வகித்த தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் இங்கே அ.தி.மு.க., சார்பில் போட்டியிடுகிறார். மூவருமே நட்சத்திர வேட்பாளர்கள் என்பதால் நீலகிரி தொகுதி நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழக வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனால் நீலகிரி தொகுதியில் கடுமையான மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

