/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேதமடைந்த குடிநீர் தொட்டி கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
சேதமடைந்த குடிநீர் தொட்டி கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : ஆக 14, 2024 12:12 AM

வால்பாறை:வால்பாறை நகரில், பள்ளி, கல்லுாரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. பல்வேறு எஸ்டேட் பகுதியிலிருந்தும், ஆயிரக்கணக்கான மக்கள் வால்பாறைக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் மக்கள், சுற்றுலா பயணியர் வசதிக்காக போஸ்ட் ஆபீஸ் முன்பக்கம், காந்திசிலை, புதிய பஸ் ஸ்டாண்ட், ஸ்டேன்மோர் பிரிவு உள்ளிட்ட, 5 இடங்களில் நகராட்சி சார்பில் கடந்த, 11 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
எவ்வித பராமரிப்பும் இல்லாமல், பழுதடைந்த நிலையில் உள்ள குடிநீர் தொட்டியில் நிரப்பப்படும் நீரை தான், மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். போஸ்ட் ஆபீஸ் முன்பக்கம் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்த நிலையில், குப்பை கொட்டும் இடமாகவும், வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் மாறி வருகிறது. அந்த தொட்டியினுள் பிளாஸ்டிக் தொட்டி வைத்து, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
மக்கள் நலன் கருதி, நகராட்சி சார்பில் அந்த இடத்தில் சேதமடைந்துள்ள குடிநீர் தொட்டி கட்டமைப்பை அகற்ற வேண்டும். அதன்பின், அப்பகுதியை புதுப்பித்து, பிளாஸ்டிக் தொட்டி அமைத்து, குடிநீர் வினியோகிக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

