/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பசுமை வளக்கும் குப்பை தொட்டி; அசத்தும் ஊராட்சி நிர்வாகம்
/
பசுமை வளக்கும் குப்பை தொட்டி; அசத்தும் ஊராட்சி நிர்வாகம்
பசுமை வளக்கும் குப்பை தொட்டி; அசத்தும் ஊராட்சி நிர்வாகம்
பசுமை வளக்கும் குப்பை தொட்டி; அசத்தும் ஊராட்சி நிர்வாகம்
ADDED : ஆக 29, 2024 12:04 AM

உடுமலை: உடுமலை அருகே, ஊராட்சியில் குப்பைத்தொட்டிகளை வீணாக்காமல், மரம் வளர்க்க பயன்படுத்தி வருகின்றனர்.
ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், தற்போது வீடுகள் தோறும் சென்று, மக்கும், மக்காத கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, ஊராட்சிகளில் குப்பை சேகரிக்க, பொது இடங்களில் சிமெண்ட் மற்றும் பிளாஸ்டிக் கொண்டு உருவாக்கப்பட்ட குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தது.
தற்போது, திடக்கழிவு மேலாண்மை திட்டம் பயன்பாட்டிற்கு வந்ததால், பழைய குப்பை தொட்டிகளுக்கு 'வேலை' இல்லாத நிலையில், பல ஊராட்சிகளில் வீணாக, குப்பையுடன், குப்பையாக கிடக்கிறது. ஆனால், உடுமலை ஒன்றியம், பள்ளபாளையம் ஊராட்சியில், பழைய சிமெண்ட் குப்பை தொட்டிகளை, மரம் வளர்க்கும் திட்டத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர்.
பிரதான ரோட்டிலிருந்து, கிராமத்திற்கு செல்லும் வழித்தடத்தில், பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, அவற்றுக்கு பாதுகாப்பாக இந்த சிமெண்ட் தொட்டிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குப்பை தொட்டிகளையும் 'குப்பை' யாக வீணாக்காமல், பசுமை வளர்க்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.