/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதையில் பஸ்சை இயக்கி விபத்து பஸ்சிற்காக காத்திருந்தவர் பலி
/
போதையில் பஸ்சை இயக்கி விபத்து பஸ்சிற்காக காத்திருந்தவர் பலி
போதையில் பஸ்சை இயக்கி விபத்து பஸ்சிற்காக காத்திருந்தவர் பலி
போதையில் பஸ்சை இயக்கி விபத்து பஸ்சிற்காக காத்திருந்தவர் பலி
ADDED : மே 15, 2024 09:16 PM

கோவை:நீலகிரி மாவட்டம் ஊட்டி தெங்குமரஹாடா பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார், 40, தொழிலாளி. இவர் சொந்த பணி காரணமாக நேற்று கோவை வந்தார். காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் காலை 11:30 மணிக்கு, பஸ்சிற்காக காத்திருந்தார்.
அங்கு ஒரு தனியார் பஸ் முன் நின்றிருந்த போது, பின் நோக்கி வந்த மீனாட்சி என்ற, 7ம் நம்பர் தனியார் பஸ், சிவக்குமார் மீது மோதியது. அதில் இரண்டு பஸ்சிற்கும் நடுவில் சிக்கி கொண்ட சிவக்குமார் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணியர் மற்றும் டிரைவர், கண்டக்டர்கள் சத்தம் போட்டு பஸ்சை நிறுத்தினர். பின், அவர்கள் விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவரை கீழே இறக்கினர். அப்போது அவர் மது போதையில் இருந்தது தெரிந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், விபத்தை ஏற்படுத்திய டிரைவரை சரமாரியாக தாக்கினர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், அவரை மீட்டு போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர். தொடர்ந்து சிவக்குமாரின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியது கோவை அருகே உள்ள பட்டணத்தை சேர்ந்த டிரைவர் திருநாவுக்கரசு, 45, என்பது தெரிந்தது. இதையடுத்து, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து சிவக்குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய டிரைவரை சக டிரைவர்கள், கண்டக்டர்கள் தாக்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.