/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூட்டு உடைத்து நகை திருட்டு: போலீசார் தீவிர விசாரணை
/
பூட்டு உடைத்து நகை திருட்டு: போலீசார் தீவிர விசாரணை
பூட்டு உடைத்து நகை திருட்டு: போலீசார் தீவிர விசாரணை
பூட்டு உடைத்து நகை திருட்டு: போலீசார் தீவிர விசாரணை
ADDED : ஏப் 29, 2024 09:18 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பொள்ளாச்சி அருகே, சேரன் நகரில் உள்ள, உமா மகேஸ்வரி காலனியை சேர்ந்தவர் பாலாஜி,48. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், ஜூனியர் டெலிகிராம் அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி சென்னையில் உள்ள அவரது அம்மா வீட்டுக்கு சென்றார். இவர், கடந்த, 27ம் தேதி உடுமலை ரோட்டில் உள்ள அவரது அண்ணன் வீட்டுக்கு சென்றார்.
நேற்று முன்தினம் பக்கத்து வீட்டுக்காரர், பாலாஜியிடம் வீட்டு கதவுகள் திறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து, வீட்டுக்கு சென்று பார்த்த போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, வீட்டினுள் பீரோவில் இருந்த நகைகள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவல் அறிந்த மகாலிங்கபுரம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வீட்டில் இருந்தோர், 50 பவுன் வரை நகை திருட்டு போயிருக்கலாம்; அவரது மனைவி வந்த பின்னரே முழு விபரமும் தெரிய வரும் என தெரிவித்ததாக, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முதற்கட்ட தகவலின் அடிப்படையில், வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை தடயவியல் நிபுணர் பதிவு செய்தார். சுற்றுப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.

