/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவுன்சிலர் பதவி 4 மாதம் தான் இப்ப நடக்குது பயிற்சி வகுப்பு
/
கவுன்சிலர் பதவி 4 மாதம் தான் இப்ப நடக்குது பயிற்சி வகுப்பு
கவுன்சிலர் பதவி 4 மாதம் தான் இப்ப நடக்குது பயிற்சி வகுப்பு
கவுன்சிலர் பதவி 4 மாதம் தான் இப்ப நடக்குது பயிற்சி வகுப்பு
ADDED : ஜூலை 19, 2024 11:47 PM
அன்னுார்:அன்னுார் ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்களுக்கு நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகளை உள்ளூர் அளவில் அடைதல் என்பது குறித்த இரண்டு நாள் பயிற்சி வருகிற 22ம் தேதி துவங்குகிறது.
அக்கரை செங்கப்பள்ளி, ஆம்போதி, கனுவக்கரை, குப்பனுார், அ.மேட்டுப்பாளையம், அல்லப்பாளையம், பசூர் ஆகிய ஏழு ஊராட்சிகளைச் சேர்ந்த 30 வார்டு உறுப்பினர்களுக்கு, அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 22, 23 தேதிகளில் பயிற்சி வகுப்பு நடக்கிறது.
கஞ்சப்பள்ளி, வடக்கலுார், ஒட்டர்பாளையம், காரே கவுண்டன்பாளையம், நாரணாபுரம், பச்சாபாளையம், குன்னத்துார் ஆகிய ஏழு ஊராட்சிகளை சேர்ந்த 30 வார்டு உறுப்பினர்களுக்கு, 24 மற்றும் 25ம் தேதி பயிற்சி வகுப்பு நடக்கிறது. மீதமுள்ள ஏழு ஊராட்சிகளை சேர்ந்த 30 வார்டு உறுப்பினர்களுக்கு, 29 மற்றும் 30ம் தேதி பயிற்சி நடக்கிறது.
இதுகுறித்து வார்டு உறுப்பினர்கள் கூறுகையில், 'வருகிற டிசம்பர் மாதத்துடன் எங்களது பதவிக்காலம் முடிகிறது. தேர்தல் அறிவிப்பு நவம்பரில் வந்து விடும். நான்கு மாதங்கள் மட்டுமே இன்னும் உள்ளது,' என்றனர்.