/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறங்காவலர் பதவி ஆறு மாதமாக காலி
/
அறங்காவலர் பதவி ஆறு மாதமாக காலி
ADDED : ஆக 27, 2024 01:24 AM
அன்னுார்;அன்னுார் மன்னீஸ் வரர் கோவில் அறங்காவலர் பதவி ஆறு மாதமாக காலியாக உள்ளது.
அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் நடைபெறும் மார்கழி மாத தேரோட்டத்தின் போது பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பர்.
இக்கோவிலில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் ஐந்து அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர். அறங்காவலர்கள் பதவி ஏற்றனர். அறங்காவலர் குழு தலைவராக நடராஜன் பொறுப்பேற்றார். இந்நிலையில் அறங்காவலர் ராமசாமி தனது பதவியை உடனே ராஜினாமா செய்தார். இதை அடுத்து ஒரு அறங்காவலர் பதவி காலியானது
அறங்காவலர் பதவிக்காக 50க்கும் மேற்பட்ட பக்தர்கள், கட்சி நிர்வாகிகள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் ஆறு மாதங்களாக அறங்காவலர் பதவி காலியாக உள்ளதால், 'இந்து சமய அறநிலையத்துறை விரைவில் அதற்கான விண்ணப்பங்களை பெற்று அறங்காவலர் நியமிக்க வேண்டும். இதனால் திருப்பணி வேகமாகும். அறங்காவலர் பதவிக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும்,' என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.